உலக செய்திகள்

ரஷியா முதல் முறையாக அனுப்பியது சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட ‘ரோபோ’ + "||" + Russia sent for the first time To the International Space Station The departed robot

ரஷியா முதல் முறையாக அனுப்பியது சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட ‘ரோபோ’

ரஷியா முதல் முறையாக அனுப்பியது சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட ‘ரோபோ’
ரஷியாவை சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான ‘ரோபோ’ ஒன்றை தயாரித்து உள்ளது.
மாஸ்கோ,

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய இந்த ‘ரோபோ’வுக்கு ‘பெடோர்’ என பெயரிட்டுள்ளது. 5 அடி 11 அங்குலம் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட இந்த ‘ரோபோ’வை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப ரஷியா முடிவு செய்தது.


அதன்படி கஜகஸ்தானில் உள்ள ரஷியாவுக்கு சொந்தமான பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘பெடோர் ரோபோ’ உடன் சோயூஸ் ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ‘ரோபோ’ நாளை (சனிக்கிழமை) சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அங்கு ‘பெடோர் ரோபோ’ மின்சார கேபிள்களை இணைத்தல் மற்றும் துண்டித்தல், தீயை அணைக்கும் கருவியை பயன்படுத்துதல் போன்ற மீட்பு பணிகளுக்கான புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும்” என்று ரஷிய விண்வெளி நிறுவனத்தின் வருங்கால திட்டங்கள் மற்றும் அறிவியலுக்கான இயக்குனர் அலெக்சாண்டர் புளோஷென்கோ கூறினார்.

விண்வெளிக்கு ரஷியா ‘ரோபோ’வை அனுப்பவது இதுவே முதல் முறை ஆகும். எனினும் பெடோர் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் ரோபோ அல்ல.

அதிக ஆபத்து நிறைந்த சூழலில் பணிபுரியும் நோக்கத்துடன் அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு ஒரு ‘ரோபோ’வை விண்வெளிக்கு அனுப்பியது.

தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்ட அந்த ‘ரோபோ’ கடந்த ஆண்டு மீண்டும் பூமிக்கு திரும்பியது. அதேபோல் ஜப்பானும் கடந்த 2013-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஒரு ‘ரோபோ’வை அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் கொரோனா வைரசா? ரெயில் பயணிகளிடம் பீதியை கிளப்பிய வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர் ரெயிலில் கொரோனா வைரசால் சுருண்டு விழுவது போல் நடித்து பயணிகளிடையே பீதியை கிளப்பினார்.
2. ரஷியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவு
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் உள்ள மில்கோவோ நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ரஷியாவில் வெந்நீர் குழாய் வெடித்து 5 பேர் பலி
ரஷியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெந்நீர் குழாய் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி
ரஷியாவில் யாமல் தீபகற்ப பகுதியில் உள்ள எரிவாயு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.
5. ரஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
ரஷியாவில் பலானா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.