உலக செய்திகள்

இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து + "||" + India, France Sign Agreements On Maritime Awareness, Skill Development

இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பாரீஸ்,

பிரதமர் மோடி, 2 நாள்கள் சுற்றுப்பயணமாக  பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  நேற்று புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் பாரீஸ் போய் சேர்ந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சாட்யூ டு சாண்ட்லி நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.  இரு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. 

இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையே இஸ்ரோ மற்றும் பாரீஸ் தேசிய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கடல்வழி போக்குவரத்தில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடல்வழி போக்குவரத்தில், குறிப்பாக இந்தோ-பசிபிக் மண்டலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை மேம்படுத்துவதற்கான சிறப்பான களமாகும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இந்திய அரசின் தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் பிரென்சு குடியரசின்  தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் இடையில் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,767 பேருக்கு தொற்று உறுதி; கொரோனா பாதிப்பு 1,31,868 ஆக உயர்வு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,767 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்ந்துள்ளது.
2. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை 3,720 ஆக உயர்வு
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பலி எண்ணிக்கையும் 3,720 ஆக உயர்ந்தது.
4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654-பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஊரடங்கால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்ப்பு- மத்திய அரசு
இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.