மாநில செய்திகள்

தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியீடு + "||" + In penetrating into Tamil Nadu Release photos of terrorists

தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியீடு

தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியீடு
தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
கோவை,

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. 

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். 

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி உள்ளது.

பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை கோவை போலீசார் வெளியிட்டு உள்ளனர். 6 பயங்கரவாதிகளில் 3 பேரின் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் நவீனமுறையில் கள்ளநோட்டுகள் அச்சடித்த 3 பேர் கைது
கோவையில் நவீனமுறையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து கட்டுக்கட்டாக வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஆப்பிரிக்க நாட்டில் கொடூரம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 24 பேர் பலி
ஆப்ரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பலியாகினர்.
3. காஷ்மீரில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
4. கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு; 3 பயணிகள் பலி
கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பயணிகள் பலியாகினர்.
5. கோவையில் என்ஜினீயர் எாித்து கொலை - 2 மாதங்களுக்கு பிறகு உடல் மீட்பு
கோவையில் என்ஜினீயர் எரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். 2 மாதங்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அதிகம் வாசிக்கப்பட்டவை