தேசிய செய்திகள்

உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது; இந்தியாவில் சிறப்பாக உள்ளது -நிர்மலா சீதாராமன் + "||" + The global economy is sluggish; Not in India Nirmala Sitharaman

உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது; இந்தியாவில் சிறப்பாக உள்ளது -நிர்மலா சீதாராமன்

உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது; இந்தியாவில் சிறப்பாக உள்ளது -நிர்மலா சீதாராமன்
உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாகவே உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி

நாட்டின் பொருளாதார நிலை குறித்து  மத்திய நிதி அமைச்சர் நிரமலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாகவே உள்ளது.  அமெரிக்கா , பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்திக்கின்றன. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு.

உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீத அளவிலேயே உள்ளது.

அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.  பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பொருளாதார சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
2. 2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
3. சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை சமர்ப்பித்தார்
சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் சமர்ப்பித்தார்.
4. விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை ஆதார் எண் அடிப்படையில் பான் கார்டு- நிர்மலா சீதாராமன்
பான் கார்டு விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை, ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் விரைந்து பான் கார்டு வழங்கப்படும்.
5. விவசாயிகளுக்காக இரயில் சேவை - விமான சேவை தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
விவசாயிகளுக்காக இரயில் சேவை மற்றும் விமான சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்