தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் பழங்குடி இன பெண்கள் அரசு பேருந்து ஓட்டுநர்களாக நியமனம் + "||" + Tribal women in Maharashtra to be appointed as state bus drivers

மகாராஷ்டிராவில் பழங்குடி இன பெண்கள் அரசு பேருந்து ஓட்டுநர்களாக நியமனம்

மகாராஷ்டிராவில் பழங்குடி இன பெண்கள் அரசு பேருந்து ஓட்டுநர்களாக நியமனம்
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் பழங்குடி இன பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
புனே,

மகராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாட்டில் முதன் முறையாக அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் பழங்குடி இன பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாநில அரசாங்கத்தின் இந்த புதிய முயற்சியை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவங்கி வைத்தார்.

இது குறித்து பேசிய மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறை அமைச்சர் திவாகர் ரவ்டே, “நமது நாட்டில் முதல் முறையாக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

பிரதீபா பாட்டீல் பேசிய போது, “பெண் ஓட்டுனர்களை போக்குவரத்து நிர்வாகம் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெகு தூரத்திற்கு பணிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியிடங்களில் தங்க நேர்ந்தால் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், பழங்குடி இனத்தவர்கள் நமது கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி நமது நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுனர் பணிக்காக முதற்கட்டமாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த 163 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கனரக வாகனங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் ஓட்டுனர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளான கட்சிரோலி, வார்தா, பந்தாரா மற்றும் கோண்டியா ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அப்பெண்களில் ஒருவரான விஜய ராஜேஷ்வரி கூறுகையில், தான் ஓட்டுனர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும், பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருவதாகவும் இந்த துறையிலும் தங்கள் முழு திறனை வெளிப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி இடத்தில் கோவில் கட்ட பூஜை: ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகை
கந்தர்வகோட்டை அருகே பள்ளி இடத்தில் கோவில் கட்ட கிராமமக்கள் பூஜை செய்தனர். இதையடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. நாகர்கோவிலில் பரபரப்பு மதுக்கடை அமைக்க கடும் எதிர்ப்பு மதுபாட்டில்களுடன் வந்தவாகனத்தை பெண்கள் முற்றுகை
நாக்கோவிலில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களுடன் வந்த வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3. பெண்களை சமையல் கற்க சொல்வதா? - வித்யா பாலன் எதிர்ப்பு
பெண்களை சமையல் கற்க சொல்வதற்கு நடிகை வித்யா பாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4. ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பெண்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
5. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.