மாநில செய்திகள்

தொடக்க கல்வியை கட்டாயம் தாய்மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் வெங்கையாநாயுடு பேச்சு + "||" + Primary Education Must be taught in tongues The talk of Venkayanayudu

தொடக்க கல்வியை கட்டாயம் தாய்மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் வெங்கையாநாயுடு பேச்சு

தொடக்க கல்வியை கட்டாயம் தாய்மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் வெங்கையாநாயுடு பேச்சு
தொடக்க கல்வியை கட்டாயம் தாய்மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேசினார்.
சென்னை,

ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியாரின் 150-வது பிறந்தநாள் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. தருமமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு தலைமை தபால்துறை தலைவர் எம்.சம்பத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.


விழாவில், ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியார்-சீத்தம்மா உருவ சிலைகள் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியார் இந்த சமுதாயத்திற்காக மிகவும் பாடுபட்டு இருக்கிறார். கல்வி, சுகாதாரம் என்பது மிக முக்கியமானது. துரித உணவுகள், நோய்களை சீக்கிரமாகவே நம்மை நெருங்க செய்து விடும். எனவே இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.

நம்முடைய மொழிகள் தான் நம்மை இணைக்கின்றன. மொழிகள் நம்முடைய அறிவாற்றலையும், பரந்து விரிந்த மாற்று யோசனைகளையும் முன்னெடுப்பதற்கு உதவிக்கரமாக இருக்கும். வாய்ப்பு இருக்கும் இடங்களில் இந்திய மொழிகளை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்தும், தரமான புத்தகங்களை வழங்கியும் கல்வியில் இந்திய மொழிகளை ஊக்கப்படுத்தவேண்டும்.

நம்முடைய சமூகத்தில் ஏராளமான கொடையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சமூக சேவையாற்றும் நிறுவனங்களை நிறுவுவதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும். புதிய கல்வி கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அனைவருக்கும் உயர்தர கல்வியை வழங்கி நேரடியாக நம்முடைய தேசத்தை சமமான மற்றும் துடிப்பான அறிவாற்றல் மிகுந்த சமூகமாக மாற்றுவதற்கான பங்களிப்பினை கொடுப்பதுதான் இந்த ஒருங்கிணைந்த கல்வி முறையின் நோக்கம் ஆகும்.

இந்த கல்வி கொள்கையின் வரைவு, பள்ளி கல்வி துறையில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. அதில், மனிதநேயத்துடன் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்படுவதோடு, ஒழுங்குமுறை சுமையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

தாய்மொழி எல்லோருக்கும் முக்கியம். கல்வியை உள்ளடக்கிய மற்றும் உலக அளவிலான வகையில் மாற்றுவதற்கு குறைந்தது 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வியை மாணவர்களுக்கு தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியிலேயே கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் பாடத்திட்டங்கள் பற்றிய மாணவர்களின் எண்ண ஓட்டங்கள் மிகவும் எளிதாக இருக்கும். மொழி என்பது நம்முடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கருவியாகும். ஆனால் ஒவ்வொரு மொழிகளுக்கான இலக்கியம் வளம் மிகுந்தது மட்டுமின்றி, வேறுபாடானது.

உள்ளூர்வாசிகளுக்கு பள்ளிகள் வள மையமாக திகழவேண்டும். பள்ளிகள் சமூக மற்றும் பாலின நீதி, குடும்ப சுகாதாரம், சுத்தம், குழந்தை தொழிலாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள், மண் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தன்னார்வத்துடன் சமூக பணியாற்றவேண்டும்.

ஒரே நாடு, ஒரே மக்களாக இருக்கிறோம். தாய்மொழியை உதாசீனப்படுத்தாமல், தாய்மொழி கல்வியுடன் பல்வேறு மொழிகளையும் கற்றுக்கொள்ளவேண்டும். மொழிகளை படிப்பதில் ஒருபோதும் திணிப்போ, எதிர்ப்போ இருக்கக்கூடாது. எல்லோரும் எல்லா மொழிகளையும் படிக்கலாம். சிலர் மொழி பிரச்சினையில் சர்ச்சையை ஏற்படுத்துவது தவறானது.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய நமது பிரதமர் நரேந்திரமோடி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்க வேண்டுகோள். இதனை நாம் அனைவரும் பின்பற்றி, பிளாஸ்டிக் ஒழிப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்.

உலக அளவில் 3-வது பொருளாதார நாடாக இந்தியா உருவாவதற்காக வாய்ப்புகள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்து இருக்கிறது. இத்தகைய நிலையை அடைவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வெங்கையாநாயுடு தனது உரையை தமிழில் தொடங்கி, தெலுங்கு, ஆங்கிலம் என்று மும்மொழியில் பேசினார்.

முன்னதாக, அறக்கட்டளையின் தலைவர் எம்.வெங்கடேச பெருமாள் வரவேற்று பேசினார். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.வி.கண்ணைச்செட்டி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க - நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்-தொடக்க கல்வித்துறை
ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.