மாநில செய்திகள்

அருண் ஜெட்லி மறைவு: பன்வாரிலால் புரோகித் இரங்கல் + "||" + Death of Arun Jaitley Panwarilal Purohit condolences

அருண் ஜெட்லி மறைவு: பன்வாரிலால் புரோகித் இரங்கல்

அருண் ஜெட்லி மறைவு: பன்வாரிலால் புரோகித் இரங்கல்
முன்னாள் நிதி மந்திரியும், எம்.பி.யுமான அருண் ஜெட்லி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
சென்னை,

அருண் ஜெட்லி மறைவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் நிதி மந்திரியும், எம்.பி.யுமான அருண் ஜெட்லி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன். அவர் நிதி மற்றும் ராணுவ இலாகாக்களை புத்திசாலித்தனமாக கையாண்டார். வக்கீல் தொழில் செய்துவந்த அவர் அதில் பிரகாசமாக ஜொலித்தார்.


நிர்வாகம் செய்யும் திறமைகளால் அறியப்பட்ட அனுபவம் மிக்க அரசியல் கட்சி தலைவரை நாடு இழந்துவிட்டது. இந்திய மக்களின் சொத்தாக அருண் ஜெட்லி திகழ்ந்தார். அனைத்து கட்சியினராலும் சிறந்த நாடாளுமன்றவாதி என்று போற்றப்பட்டவர். நாட்டுக்கு அவர் பங்களிப்புகளையும், ஏழைகளுக்கு அவர் செய்தவற்றையும் ஒருபோதும் மறக்கமுடியாது.

அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை