உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது; பாகிஸ்தான் அதிபர் பேட்டி + "||" + India playing with fire in Kashmir: Pakistan Prez

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது; பாகிஸ்தான் அதிபர் பேட்டி

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது; பாகிஸ்தான் அதிபர் பேட்டி
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என பாகிஸ்தான் அதிபர் பேட்டியில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வைஸ் நியூஸ் என்ற கனடா-அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவுகளை அரசியலமைப்பில் இருந்து நீக்கி விட்டதனால் அங்கு நிலைமை மேம்படும் என்று இந்தியா நினைத்தால், இந்திய அரசாங்கம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வசித்து வருகிறது என்று அர்த்தம்.

இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொண்டு இந்தியா உண்மையில்  தீவிரவாதத்தினை ஊக்குவித்துள்ளது.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடி வருகிறது என கூறியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு பின் இந்த விவகாரம் சர்வதேச அளவிற்கு சென்றுள்ளது என கூறிய அவர், பாதுகாப்பு கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை இந்தியா தவிர்த்து விட்டது.  இந்த விவகாரம் சுமுக முறையில் தீர்க்கப்பட பாகிஸ்தானுடன் அமர்ந்து பேசுவதற்கும் இந்தியா மறுத்து விட்டது என்றும் கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதல்களை இந்தியா நடத்த கூடிய சாத்தியம் உள்ளது.  ஆனால் போரை தொடங்க பாகிஸ்தான் விரும்பவில்லை.  இந்தியா போரை தொடங்கினால், எங்களை தற்காத்து கொள்வதென்பது எங்களது உரிமை என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு
இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறார்கள் என ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
2. வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் ராணுவத்துக்கு பாராட்டு மழை
காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பதிலடியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, சக ராணுவ வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.
3. காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
4. காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலை
காஷ்மீர் நிலைமை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.
5. லண்டனில் இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை
லண்டனில் இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தி தூதரக வளாகத்தில் சேதம் ஏற்படுத்தினர்.