தேசிய செய்திகள்

காஷ்மீரில் நோயாளிகள் உயிரிழக்கிறார்கள் - மருத்துவர்கள்; உயிர் காக்கும் மருந்துக்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு + "||" + People are Dying, Say Doctors as Valley Runs Out of Lifesaving Medicines amid Lockdown

காஷ்மீரில் நோயாளிகள் உயிரிழக்கிறார்கள் - மருத்துவர்கள்; உயிர் காக்கும் மருந்துக்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு

காஷ்மீரில் நோயாளிகள் உயிரிழக்கிறார்கள் - மருத்துவர்கள்;  உயிர் காக்கும் மருந்துக்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் காரணமாக உயிர்காக்கும் மருந்துக்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


காஷ்மீரில் உள்ள மருந்து சப்ளையர்கள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமல் போய்விட்டதாகவும், கிராமப்புறங்களில் மருந்துக்கள் இல்லாத நிலை இருப்பதாகவும், இதனால் இறப்பு ஏற்படுகிறது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்யப்பட்டதும்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் கட்டுப்பாடுகள் காரணமாக உயிர்காக்கும் மருந்துக்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சாஜித் அலி என்பவருடைய தாயார் சுராயா பேகம் (வயது 65) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்து இருப்பு 2 நாட்களுக்கு இருந்துள்ளது. அடுத்த நாளுக்கான மருந்து வாங்க சாஜித் அலி முயற்சி செய்துள்ளார். கடந்த செவ்வாய் அன்று ஸ்ரீநகருக்கு வந்து 12-க்கும் மேற்பட்ட மெடிக்கல்களில் மருந்து கேட்டு திரிந்துள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.  போக்குவரத்து சேவையில்லாமையால் மிகவும் இன்னலான நிலையில் சிக்கியுள்ளார்.  உள்ளூர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் ஏறி அலி ஸ்ரீநகர் சென்றுள்ளார். 3 மணி நேரங்களுக்கு மேல் மருந்தை தேடி அலைந்தும் கிடைக்காத கோபத்தால், கலங்கியுள்ளாா் அலி. பின்னர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு சென்று, டெல்லிக்கு டிக்கெட் முன்பதிவு செய்து, அங்கிருந்து மருந்து வாங்கி சென்றுள்ளார். 

30 வயதான அலி மறுநாள் தனது தாயுக்கு ஒருமாதத்திற்கு போதுமான மருந்தை எடுத்துக்கொண்டு தனது வீட்டை அடைந்துள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவரது உயிர்பற்றி அவரது பெற்றோர் மிகவும் கவலைப்பட்டுள்ளனர். அவர் திரும்பி வந்தபோது நிம்மதியடைந்தனர். காஷ்மீரில் ஒரு தொழிலதிபராக இருக்கும் அலி, தனது தாயிடம் கதையை விவரித்தபோது, அவர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். "என்னால் செலவு செய்து இந்த வழியில் மருந்து வாங்க முடிந்தது, ஆனால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள்?" என்று அலி கவலைக்கொள்கிறார்.
 
பள்ளத்தாக்கில் உள்ள மருந்து சப்ளையர்கள், உயிர் காக்கும் மருந்துகள் தீர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள். கிராமப்புறங்களில் மருந்துகளின் இருப்பு ஏற்கனவே குறைந்துவிட்டது, இதனால் இறப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். காஷ்மீரின் வடக்கே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு அருகே அமைந்துள்ள உரி நகரத்தில் மாலிக் மெடிக்கல் ஹால் அறியப்பட்ட மருந்தகமாகும். ஆனால் இங்கு முக்கியமான மருந்துகள்கூட கிடைக்காத நிலை உள்ளது. 

மாலிக் மெடிக்கலின் விற்பனையாளர் பேசுகையில், "எங்களிடம் மருந்துக்கள் கையிருப்பில் இல்லை. ஆகஸ்ட் 5 முதல் எங்களுக்கு எந்தவிதமான புதிய விநியோகமும் கிடைக்கவில்லை ”என்று கூறுகிறார்.  “எங்களிடம் உயிர் காக்கும் மருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு நாளும் தொலைதூர இடங்களிலிருந்து 30க்கும் அதிகமான நோயாளிகள் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றுக்கான மருந்துகளை தேடி இந்த மருத்துவ கடைக்கு வந்து செல்கிறார்கள்.  மருந்துகள் பற்றாக்குறை குறித்து நோயாளிகள் கோபப்படுகிறார்கள். "கடந்த ஒரு வாரத்திலிருந்து நான் எனது தந்தைக்கு இன்சுலின் மருந்தை தேடுகிறேன், ஆனால் என்னால் அதைப் பெற முடியவில்லை" என்று உரியில் உள்ள நம்லா கிராமத்தில் வசிக்கும் முகமது இஸ்மாயில் கூறுகிறார்.

உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் கிடைப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் மருத்துவத்தின் முழுமையான பற்றாக்குறையை யாரும் கவனிக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. "மருந்துகள் கிடைப்பது மற்ற அத்தியாவசியங்களை விட முக்கியமானது" என்று கூறும் இஸ்மாயில் "நாங்கள் மருந்துகள் இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறோம்." என வேதனையுடன் கூறுகிறார். 

ஸ்ரீநகரில் மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனத்தின் உரிமையாளர் மன்சூர் அகமது நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “எங்களிடம் 30 சதவீத மருந்துகள் மட்டுமே உள்ளன, டெல்லியில் இருந்து புதிய சப்ளை எதுவும் வரவில்லை. கட்டுப்பாடுகள் மற்றும் தகவல்தொடர்பு பற்றாக்குறை காரணமாக கிராமப்புறங்களுக்கு கிடைக்கக்கூடிய மருந்துகளை எங்களால் அனுப்ப முடியவில்லை. ” எனக் கூறியுள்ளார். 

கடந்த 30 ஆண்டுகளில் காஷ்மீர் இதுபோன்ற ஒரு மோசமான மருத்துவ நெருக்கடியை அனுபவித்ததில்லை என்று கூறுகிறார் மன்சூர் அகமது. மாநிலத்தில் மருந்து சப்ளையர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல் தகவல்தொடர்பு துண்டிப்பாகும்.

"மருந்து பொருட்களுக்கான புதிய ஆர்டர்களை வழங்க டெல்லியில் உள்ள எங்கள் சப்ளையர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று கூறும் அகமது, சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு வரை எல்லா வழிகளிலும் பயணித்து ஒரு ஆர்டரை கொடுத்தோம். எங்களுக்கு சில மருந்து பொருட்கள் வந்துள்ளது. அது தேவையைவிட குறைவானது. கூடுதல் கட்டணம் செலுத்தினாலும் டிரான்ஸ்போர்ட்டர்கள் கூட காஷ்மீருக்கு பொருட்களை எடுத்து செல்ல தயங்குகிறார்கள்,”என்றார். கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கான உணவைப் போன்ற அடிப்படை தேவை ஒன்று கூட கிடைக்கவில்லை என விமர்சனம் உள்ளது.

2016 அமைதியின்மை போன்ற கடந்த காலங்களில் பள்ளத்தாக்கு சிக்கலான சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், மருந்து வழங்கல் ஒருபோதும் மோசமாக பாதிக்கப்படவில்லை. "இது மிகவும் மோசமான நிலைமை" என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் (பெயரை தெரிவிக்க விரும்பவில்லை) "மருந்துகள் கிடைக்காததால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்," என்று கூறியுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள் மருந்து வழங்கல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், உயர்மட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், உயிர் காக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளின் வருகை மருத்துவமனைகளில் அதிகரித்து வருகிறது எனக் கூறியுள்ளனர்.

"உயிர் காக்கும் மருந்துகளை எடுத்துவரும் நோயாளிகள் சிறிது நேரம் தங்கள் மருந்தைப் பெறாவிட்டால், அவர்கள் இறந்துவிடுவார்கள்" என்று எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். மருந்துகள் கிடைக்காததால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், இதனால் இறப்புகள் நடப்பதை நிரூபிக்கும் வகையில் சம்பவங்கள் நடக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக்கில் கிராமத்தில் வசிக்கும் குர்ஷி பேகம் புதன்கிழமை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டால் அவரது மகன் உடனடியாக நெபுலைசரைப் பயன்படுத்தினார், அதில் மருந்து இல்லை என்பதை உணர்ந்துள்ளார். பின்னர் பல்வேறு இன்னல்களை கடந்து தனியார் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் குர்ஷி பேகம் உயிரிழந்துவிட்டார். குர்ஷியின் மகன் பேசுகையில் "நாங்கள் என்னுடைய தாயை காப்பாற்ற எல்லா வழிகளிலும் முயற்சித்தோம், ஆனால் நாங்கள் உதவியற்றவர்களாக இருந்தோம். ஆம்புலன்ஸை அழைக்க எந்தஒரு வழியும் இல்லை, ”எனக் கூறியுள்ளார். குர்ஷியின் மரணத்திற்கு அவரது குடும்பத்தினர் அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.   

ஸ்ரீநகர் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் பேசுகையில், "ஒவ்வொரு நாளும் இறப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் யாரும் பொறுப்பேற்கவில்லை" என்று கூறியுள்ளார். நெபுலைசரில் மருந்து கிடைத்திருந்தால் குர்ஷி உயிர் பிழைத்திருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்.  

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.
2. காஷ்மீரில் குடியேற்ற சான்றிதழ் பெற்ற நகை வியாபாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த நகை வியாபாரி, குடியேற்ற சான்றிதழ் பெற்றதால் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
3. கா‌‌ஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; நாசவேலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்
கா‌‌ஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
4. கா‌‌ஷ்மீரில் கோவிலை தாக்கும் முயற்சி முறியடிப்பு; 6 கையெறி குண்டுகள் மீட்பு
ஜம்மு காஷ்மீரில் கோவிலை தாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
5. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ; சாலைகள் மூடல்
காஷ்மீரில் நேற்று முன்தினம் இரவு முதல் பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது.