தேசிய செய்திகள்

நக்சலைட்டுகள் பிரச்சினை: உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை + "||" + Naxalites issue: Home Minister Amit Shah consulted today

நக்சலைட்டுகள் பிரச்சினை: உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை

நக்சலைட்டுகள் பிரச்சினை: உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை
நக்சலைட்டுகள் பிரச்சினை தொடர்பாக, உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,

சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நக்சலைட்டுகளுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.


இந்தநிலையில், நக்சலைட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நக்சலைட்டுகள் உள்ள பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் 10 மாநில முதல்-மந்திரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.