தேசிய செய்திகள்

ஜனநாயக உரிமை பறிப்புதான் மிகப்பெரிய தேசவிரோதம் - பிரியங்கா குற்றச்சாட்டு + "||" + The democratic rights reject, the greatest anti-nationalism - Priyanka Accusation

ஜனநாயக உரிமை பறிப்புதான் மிகப்பெரிய தேசவிரோதம் - பிரியங்கா குற்றச்சாட்டு

ஜனநாயக உரிமை பறிப்புதான் மிகப்பெரிய தேசவிரோதம் - பிரியங்கா குற்றச்சாட்டு
காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக சொல்கிறார்கள். ஆனால், காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை பறித்ததுதான் மிகப்பெரிய தேசவிரோதம் என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,

காஷ்மீர் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அக்குழு டெல்லிக்கே திரும்பி வந்தது.


இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய விமானத்தில் ராகுல் காந்தி பயணித்தபோது, அவரிடம் காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண், தானும், தன் குடும்பத்தினரும் சந்தித்து வரும் பிரச்சினைகளை முறையிட்டுள்ளார். இந்த வீடியோ படம் வெளியாகி உள்ளது.

இது எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது? ‘தேசியம்’ என்ற பெயரில், காஷ்மீரை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் வாய் மூடப்படுகிறது, அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அவர்களில் அந்த பெண்ணும் ஒருவர்.

காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், காஷ்மீரில் ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளையும் பறித்ததை விட பெரிய அரசியலோ, தேசவிரோதமோ வேறு இல்லை.

ஜனநாயக உரிமை பறிப்பை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நாங்கள் குரல் கொடுப்பதை நிறுத்த மாட்டோம். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் ; ஐநா பொதுச்செயலாளர் யோசனையை நிராகரித்தது இந்தியா
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறிய ஐநா பொதுச்செயலாளரின் யோசனையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
2. அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
4. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
5. போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு
நடிகர் கமல்ஹாசனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.