தேசிய செய்திகள்

ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல் + "||" + Free Traveling on trains: A fine collection of Rs .1,377 crore

ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்

ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,377 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ‘ஓசி’யில் பயணம் செய்து பிடிபடுபவர்களிடம் டிக்கெட் கட்டணத்துடன் குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அபராதத்தை செலுத்த மறுத்தாலோ அல்லது அபராதம் செலுத்த பணம் இல்லாவிட்டாலோ அத்தகைய நபர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் ரெயில்வே சட்டத்தின் 137-வது பிரிவின்படி, வழக்கு பதிவு செய்து, அந்த பயணிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். மாஜிஸ்திரேட், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம்வரை ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிடுவார்.


இதற்கிடையே, 2016-2017-ம் ஆண்டுக்கான ரெயில்வே நிதி அறிக்கையை ஆய்வு செய்த நாடாளுமன்ற ரெயில்வே மரபு குழு, ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கவலை தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, டிக்கெட் பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. ஒவ்வொரு டிக்கெட் பரிசோதகருக்கும் அபராதம் வசூலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், அபராத வசூல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு ரெயில்வே பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2016-2017 நிதியாண்டில், ரெயில்களில் ‘ஓசி’ பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.405 கோடியே 30 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.441 கோடியே 62 லட்சமும், 2018-2019-ம் நிதியாண்டில் ரூ.530 கோடியே 6 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஆக மொத்தம் 3 ஆண்டுகளில், ரூ.1,377 கோடி வசூலாகி உள்ளது. இது, முந்தைய 3 ஆண்டுகளை விட 31 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம்வரை, டிக்கெட் இன்றி பயணம் செய்த 89 லட்சம் பயணிகள் பிடிபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அலைேமாதினர்.
2. திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,331¾ கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,331¾ கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
3. தஞ்சை மெயின் லைனில் அனைத்து ரெயில்களும் ஜூலை மாதம் முதல் மின்சாரத்தில் இயக்கப்படும்; தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி
தஞ்சை மெயின் லைனில் அனைத்து ரெயில்களும் ஜூலை மாதம் முதல் மின்சாரத்தில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.
4. கடந்த ஆண்டு 4 லட்சம் பேர் ரெயிலில் ‘ஓசி’ பயணம் ரூ.16¼ கோடி அபராதம் வசூல்
கடந்த ஆண்டு 4 லட்சம் பேர் ரெயிலில் ‘ஓசி’ பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.16.33 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5. மாவட்ட தலைநகரமான திருப்பத்தூரில், அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
மாவட்ட தலைநகரமான திருப்பத்தூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...