தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை பாகிஸ்தான் விரும்புகிறது - ஸ்மிருதி இரானி விமர்சனம் + "||" + Rahul is liked by Pakistan, cares little for tricolour Smriti Irani

ராகுல் காந்தியை பாகிஸ்தான் விரும்புகிறது - ஸ்மிருதி இரானி விமர்சனம்

ராகுல் காந்தியை பாகிஸ்தான் விரும்புகிறது - ஸ்மிருதி இரானி விமர்சனம்
ராகுல் காந்தியை பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது என ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் அங்கு பிரவேசிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி பேசுகையில், கொடூரமான நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. அடக்குமுறை சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் நடக்கும் கலவரத்தால் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பேசியிருந்தார். 

இதனை குறிப்பிட்டு பாகிஸ்தான், ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்திக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்துள்ள ஸ்மிருதி இரானி, 
ராகுல் காந்தியை பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது  எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமேதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தியிடம் இருந்து ஆதரவை பெறுவது பாகிஸ்தானுக்கு இது முதல்முறையான சம்பவம் கிடையாது. தேசத்தின் கொடியை பற்றி குறைவாக சிந்தித்து, அதனுடைய மதிப்பு, மாண்புகளை குறைவாக மதிப்பிடும் தலைவர் ஒருவர் இங்கு இருக்கிறார் என்பது நாட்டின் துரதிர்ஷ்டம் ஆகும்.  அந்த தலைவர் எதிரி நாட்டால் அதிகமாக விரும்பப்படுகிறார். ராகுல் காந்தி,  நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டாமல் இருந்தாலே, நாடு சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் எனவும் ஸ்மிருதி இரானி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி தலைமையில் காங்.காரிய கமிட்டி கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.
2. டெல்லியில் கலவரம்- அமித்ஷா பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
3. காங்கிரசில் என்ன தான் நடக்கிறது...? ராகுல்காந்தி தலைவராவாரா...? மாட்டாரா...?
காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை காங்கிரசுக்குள் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
4. ராணுவ உயர் பதவி அளிக்க மறுப்பதா? பெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெண்களை மத்திய அரசு அவமரியாதை செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
5. புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி
புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.