உலக செய்திகள்

இந்தியாவிற்கு வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - பாகிஸ்தான் + "||" + No decision on airspace closure to India yet Pakistan

இந்தியாவிற்கு வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - பாகிஸ்தான்

இந்தியாவிற்கு வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - பாகிஸ்தான்
இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதலான போக்கு நிலவுகிறது. இந்தியாவுடன் மோதலான போக்கை கடைப்பிடிக்கும் பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு அதனுடைய வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்காத வகையில் தடைவிதிக்க பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான ஆலோசனையை மேற்கொண்ட பின்னர் முடிவு எடுக்கப்படும். அனைத்து காரணிகளையும் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்: டிரம்ப்-மோடி முன்னிலையில் கையெழுத்து
இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம், டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
2. இரு நாடுகளுக்கிடையே ஐந்து பிரிவுகளில் பேச்சுவார்த்தை ; சிஏஏ இடம்பெறவில்லை -வெளியுறவு செயலாளர்
இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையே ஐந்து முக்கிய பிரிவுகளில் பேச்சுவார்த்தை நடந்தன, குடியுரிமை திருத்த சட்டம் இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
3. இந்தியாவுடன் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம்: ஆமதாபாத் நிகழ்ச்சியில் டிரம்ப் அறிவிப்பு
ரூ.21 ஆயிரத்து 600 கோடி மதிப்புள்ள அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று ஆமதாபாத் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.
4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
5. இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான்- பிரதமர் மோடி
இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான் என்று பிரதமர் மோடி பேசினார்.