தேசிய செய்திகள்

லடாக்கில் சுற்றுலாத் துறை அலுவலகம் அமைக்கப்படும்: மத்திய அரசு + "||" + Centre to set up tourism office in Ladakh soon

லடாக்கில் சுற்றுலாத் துறை அலுவலகம் அமைக்கப்படும்: மத்திய அரசு

லடாக்கில் சுற்றுலாத் துறை அலுவலகம் அமைக்கப்படும்: மத்திய அரசு
லடாக் பகுதியில் சுற்றுலாத் துறை அலுவலகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
லடாக்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என மத்திய அரசு கடந்த 5-ம் தேதி அறிவித்தது. பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ் கட்சியினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லடாக் தொகுதி எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால், லடாக் மக்கள் இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

லடாக் பகுதியில் சுற்றுலா துறையை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா தினத்தன்று லடாக் பகுதியில், சுற்றுலாத் துறை அலுவலகம் நிறுவப்படும் என்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “லே பகுதியில் இருக்கும் சுற்றுலாத் துறை செயலகம், வரும் செப்டம்பர் 3 முதல் 6-ம் தேதிக்குள் லடாக் பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கைகளை பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார்” என்றார்.

மேலும், “சுற்றுலா பயணிகளின் வரவை அதிகரிப்பதன் மூலம் அப்பகுதியில் வேலைவாய்ப்புகள் பெருகும். சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்படுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கும் திட்டமும் உள்ளது.

லடாக் பகுதிக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பும். இந்த பகுதியின் அழகை உலகிற்கு காட்சிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சியாச்சினில் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியா திட்டம்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்கு அனுமதிக்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2. பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா கலெக்டர் ரத்னா தொடங்கி வைத்தார்
சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3. டெல்லியில் சைக்கிளில் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்ற துணை முதல் மந்திரி
டெல்லியில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா அலுவலகத்திற்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
4. லடாக், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களைக் காட்டும் புதிய வரைபடம்
லடாக், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களைக் காட்டும் இந்தியாவின் புதிய வரைபடம் வெளியாகியுள்ளது.
5. ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக்கிற்கான புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது; மத்திய மந்திரி ஜவடேகர்
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக மாறி அவற்றின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.