உலக செய்திகள்

இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக வாக்களித்த இங்கிலாந்து மக்கள் + "||" + Over 1.2 million people sign petition against UK parliament suspension

இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக வாக்களித்த இங்கிலாந்து மக்கள்

இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக வாக்களித்த இங்கிலாந்து மக்கள்
இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து அரசின் வலைத்தளத்தில் இங்கிலாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.
லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில், வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவது உறுதி என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அவர், இங்கிலாந்து பாராளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அரசாங்கத்தின் வலைத்தளத்தில் இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்குவது குறித்து கருத்து கேட்கும் விதமாக மனு ஒன்று பதிவேற்றப்பட்டது. அதில் சுமார் 12 லட்சம் மக்கள் பாராளுமன்றம் முடக்கப்படுவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மனு பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள் 1 லட்சம் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வாக்களித்தனர்.

செப்டம்பர் 9 இல் இருந்து 12 ஆம் தேதிக்குள் பாராளுமன்றம் முடக்கப்படலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இங்கிலாந்து மக்களின் மனநிலை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஜோதிகா படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ்
தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஜோதிகா படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.
2. இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு
இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக உயர்ந்துள்ளது.
3. இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?
இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
4. இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்
ஊரடங்கு நிலையிலும் இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் தனது 28 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் வெள்ளை பிகினியில் கொண்டாடினார்.