தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விரைவில் தனியார் மயம் - மத்திய அரசு திட்டவட்டம் + "||" + Government is determined to privatise Air India: Central Government categorically

ஏர் இந்தியா விரைவில் தனியார் மயம் - மத்திய அரசு திட்டவட்டம்

ஏர் இந்தியா விரைவில் தனியார் மயம் - மத்திய அரசு திட்டவட்டம்
ஏர் இந்தியா விரைவில் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.


இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதி கொண்டுள்ளது. ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், அதை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இதை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்” என கூறினார்.

அத்துடன், “யார் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கினாலும், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வலுவான தனியார் துறை கொள்கைகளின்படி ஏர் இந்தியாவை நடத்த முடியும்” என்று குறிப்பிட்டார். “ஏர் இந்தியாவை நாங்கள் தனியார் மயமாக்கினாலும், அது இந்தியர்களின் கைகளில்தான் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை விதிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
2. இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை
இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க துபாய் போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
3. ஏர் இந்தியா ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய தடை
தனது நிறுவன பணியாளர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய தடை விதிக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
4. ரெயில் சேவைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடவேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ரெயில் சேவைகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5. ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் -ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.