தேசிய செய்திகள்

புதிய இந்தியாவில் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, திறமை மட்டுமே முக்கியம் : பிரதமர் மோடி + "||" + In New India surnames are not important, only talent is important: PM Modi

புதிய இந்தியாவில் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, திறமை மட்டுமே முக்கியம் : பிரதமர் மோடி

புதிய இந்தியாவில் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, திறமை மட்டுமே முக்கியம் : பிரதமர் மோடி
கொச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 'புதிய இந்தியா' பற்றி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
புதுடெல்லி, 

கேரளாவில் உள்ள கொச்சியில் பிரபல மலையாள நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸிங் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

”இது புதிய இந்தியா, இங்கு இளைஞர்களின் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, தங்களுக்காக தனி பெயரை உருவாக்கும் திறமையே முக்கியம். புதிய இந்தியா குறிப்பிட்ட சிலரை பற்றியது அல்ல, ஒவ்வொரு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது. புது இந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு அனுமதில்லை.” என்று கூறிய மோடி,

மேலும், ”இதற்கு முன்பெல்லாம் ஒருவர் எங்கிருந்து வருகிறார், அவரது பின்புலம் என்ன? என்பதை பொருத்தே அவரது வெற்றி அமைந்தது, ஆனால் புது இந்தியாவில் திறமை மட்டுமே வெற்றியை தரும். இங்கு எல்லோரும் எல்லாவற்றிற்கும் உடன்படவில்லை என்றாலும், வெவ்வேறு தரப்புகளில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துகளை பரிமாறும் அளவுக்கு நாகரிகம் இருக்கும். புதிய இந்தியாவில் ஒருவரின் தனிப்பட்ட சிந்தனை தவிர்த்து, தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் இடையே பரஸ்பர நிலைப்பாடு இருக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுடெல்லி: சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழப்பு
புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
2. சென்னையில் வெள்ளம்-வறட்சி எவ்வாறு ஏற்பட்டது என்பதை காட்டும் வரைபடங்கள்
கொச்சி, மும்பை மற்றும் சென்னையில் வெள்ளமும், வறட்சியும் எவ்வாறு ஏற்பட்டது என்பதை காட்டும் வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
3. ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி
உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, இந்திய பொருளாதார நிலை குறித்து பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
4. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
5. இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது: மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறியுள்ளார்.