உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி + "||" + At least 5 killed, 21 shot at in US state of Texas: Police

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஹூஸ்டன்,

அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்டு பகுதி அருகே லாரி ஒன்றை 2 பேர் கொண்ட கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.  அவர்கள் பொதுமக்கள் மீதும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  21 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்து கடத்தல்காரர்களை பிடிக்க காவல் துறையினர் உடனடியாக சென்றனர்.  அவர்கள், சினெர்ஜி என்ற திரையரங்கு அருகே கடத்தல்காரர்களில் ஒருவரை சுட்டு கொன்றனர்.  அந்நபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் கூறினர்.

அதிபர் டொனால்டு டிரம்பிற்கு இந்த சம்பவம் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.  இது முட்டாள்தன மற்றும் கோழைத்தனம் நிறைந்த செயல்.  இந்த மன்னிக்க முடியாத செயலை செய்தவர்களுக்கு நீதி கிடைக்கும் என டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடன் தொல்லையால் விபரீத முடிவு: மனைவி, மகன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற தொழில் அதிபர் - தானும் தற்கொலை செய்த பரிதாபம்
கர்நாடக மாநிலத்தில் கடன் தொல்லையால் மனைவி, மகன் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. சினிமா ஸ்டைலில் ஒரு நிஜ காட்சி... துப்பாக்கி சூட்டில் நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்த போலீஸ் அண்ணன்
துப்பாக்கி சூட்டின் போது நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்துள்ளார் போலீஸ் அண்ணன்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பிறந்து 10 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பிறந்து 10 நாட்களேயான குழந்தை உயிரிழந்தது.
4. மாலியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 100 பேர் சாவு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அடிக்கடி பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
5. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...