மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு + "||" + Toll road users to pay more in Tamil Nadu as NHAI increases prices

தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு

தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னை,

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.


இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.

இந்தநிலையில் செப்டம்பர் மாதம் பிறந்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்ந்துள்ளது.

15 சுங்கச்சாவடிகள் விவரம் வருமாறு:-

பாளையம் (கிருஷ்ணகிரி- தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம்பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்- உளுந்தூர்பேட்டை), புதூர் பாண்டியபுரம் (தூத்துக்குடி- மதுரை), திருமந்ததுரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி).

இதன்படி 52 கி.மீ. தூரத்துக்குள் பயணிக்கும் கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்றுவரை ரூ.60 கட்டணமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணமாகவும், லாரி-பஸ்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.195 கட்டணமாகவும், கட்டுமானத்துக்கு பயன்படும் மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 கட்டணமாகவும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண விவரம் வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்)

கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள்- ரூ.50 (ரூ.49), மினி பஸ்கள், இலகுரக வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் - ரூ.90 (ரூ.84), 2 அச்சு கொண்ட லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் - ரூ.175 (ரூ.168), 3 அச்சுகள் முதல் வர்த்தகம் சார்ந்த மிகப்பெரிய கனரக வாகனங்கள் - ரூ.285 (ரூ.269).

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 108 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.