தேசிய செய்திகள்

நிலவின் தரைக்கு நிகரான பெங்களூரு சாலைகள் -ஓவியரின் வித்தியாசமான வீடியோ + "||" + Moonwalk in Bengaluru! Crater-sized potholes turns lunar surface for artist

நிலவின் தரைக்கு நிகரான பெங்களூரு சாலைகள் -ஓவியரின் வித்தியாசமான வீடியோ

நிலவின் தரைக்கு நிகரான பெங்களூரு சாலைகள் -ஓவியரின் வித்தியாசமான வீடியோ
கர்நாடகாவை சேர்ந்த ஓவியர் படால் நஞ்சுண்டசாமி எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள துங்கா நகர் பிரதான சாலையில், ஒருவர் விண்வெளி வீரர் போல நடந்து சென்ற வீடியோ காட்சி அது. பள்ளம் மேடாக காட்சியளிக்கும் சாலைகளின் நிலையை எடுத்துக்காட்டும்  விதமாக, அந்த நபர் விண்வெளி வீரர் போல உடையணிந்து தலைகவசம் அணிந்து செல்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த சாலையில் நமது விண்வெளி வீரர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கும் நிலையில், 2022-ஆம் ஆண்டில் நிலவில் தரையிறங்கும் நமது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற ரீதியில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்வு
கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
2. கர்நாடகத்தில் இந்திரா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம்
கர்நாடகத்தில் இந்திரா உணவகங்களில் இலவச உணவு வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. கர்நாடகத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் இந்தநோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்து உள்ளது.
4. கர்நாடகத்தில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - வியாபாரிகளுக்கு மந்திரிகள் எச்சரிக்கை
கர்நாடகத்தில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு மந்திரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட கர்நாடத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 11 பேர் உள்பட கர்நாடகத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.