தேசிய செய்திகள்

தமிழகத்துக்கான மண்எண்ணெய் அளவை உயர்த்தி தர வேண்டும் - மத்திய மந்திரிகளிடம் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல் + "||" + Kerosene level for Tamil Nadu should be raised - Minister Kamaraj urges Union ministers

தமிழகத்துக்கான மண்எண்ணெய் அளவை உயர்த்தி தர வேண்டும் - மத்திய மந்திரிகளிடம் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்

தமிழகத்துக்கான மண்எண்ணெய் அளவை உயர்த்தி தர வேண்டும் - மத்திய மந்திரிகளிடம் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்
தமிழகத்துக்கான மண்எண்ணெய் அளவை உயர்த்தி தர வேண்டும் என்று, மத்திய மந்திரிகளிடம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் வலியுறுத்தினார்.
புதுடெல்லி,

பொது வினியோக திட்டம் தொடர்பாக மாநில உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்கள் பங்கேற்ற 5-வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் திட்டத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், துறையின் முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிந்ததும் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தையும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தையும் செயல்படுத்துகிற ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து வகையிலும் கணினி மயமாக்கப்பட்ட பொது வினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதாவது, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என்று கேட்டோம். மண்எண்ணெய் அளவு குறைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, அதை 23 ஆயிரத்து 35 கிலோ லிட்டராக உயர்த்தி தர வேண்டும் என்றும், சிறப்பு பொது வினியோக திட்டத்தில் பருப்பு, பாமாயில் வழங்குவதற்கான மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், விலை உயர்வை கட்டுப்படுத்த விலை கட்டுப்பாட்டு நிதியகத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

மேலும் தமிழ்நாட்டில் நெல் கொள்முதலை இந்த மாதம் (செப்டம்பர்) வரையிலும், அரிசி ஒப்படைப்பை அடுத்த மாதம் (அக்டோபர்) வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்றோம். இந்த கோரிக்கைகளை எல்லாம் பரிசீலிப்பதாக மந்திரி தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி கேட்டதற்கு, “இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநில உணவுத்துறையின் நடவடிக்கைகள் பற்றி மட்டும்தான் விவாதிக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அனை வருக்குமான பொது வினியோக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தற்போது எப்படி செயல்பட்டு வருகிறதோ அப்ப டியே தமிழக அரசின் நடவடிக்கை அமையும்” என்று கூறினார்.

முன்னதாக அமைச்சர் காமராஜ், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார். மண்எண்ணெய் தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம்: அமெரிக்காவில், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து
அமெரிக்காவில் தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது.
2. தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி
தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறினார்.
3. தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடனடியாக மூட நடவடிக்கை - துணை முதலமைச்சர்
குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
4. இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவு பெற்றது.
5. தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.