மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - விஜயகாந்த் மகன் பேட்டி + "||" + Election The alliance with ADMK will continue Interview with Vijayakanth son

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - விஜயகாந்த் மகன் பேட்டி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - விஜயகாந்த் மகன் பேட்டி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தஞ்சாவூர்,

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்றிருப்பது நல்ல விஷயம். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினர் இதை கேலி செய்கிறார்கள்.


சந்திரயான்-2 விண்கலம் திட்டத்தில் நாம் தோல்வி அடையவில்லை. இது வெற்றிதான். அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 12 முறை விண்கலம் ஏவி அதில் தோல்வி அடைந்த பின்னர் தான் வெற்றி பெற்றுள்ளனர். நாம் முதல் முயற்சியிலேயே 95 சதவீதம் வெற்றி அடைந்துள்ளோம். இது வெற்றிக்கான முதல்படி ஆகும்.

நான் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரவில்லை. கட்சி நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜயகாந்தின் மகனாக வந்துள்ளேன். விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...