மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்ற விவகாரம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் வக்கீல்கள் நாளை கோர்ட்டு புறக்கணிப்பு + "||" + In Puducherry, Tamil Nadu Advocates tomorrow Court negligence

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்ற விவகாரம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் வக்கீல்கள் நாளை கோர்ட்டு புறக்கணிப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்ற விவகாரம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் வக்கீல்கள் நாளை கோர்ட்டு புறக்கணிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 80 ஆயிரம் வக்கீல்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்று கூட்டமைப்பு தலைவர் கூறினார்.
கோவை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 80 ஆயிரம் வக்கீல்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்று கூட்டமைப்பு தலைவர் கூறினார்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் கோவையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவரை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி அனுமதிக்க வேண்டும். இதே போல தனது பதவியை ராஜினாமா செய்ததை தலைமை நீதிபதி தஹில் ரமானி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவரை சிறிய மாநிலத்தின் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

தஹில்ரமானிக்கு பதவி உயர்வு கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கலாமே தவிர சிறிய மேகலாயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்தது வக்கீல்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தலைமை நீதிபதி தஹில் ரமானியை சென்னையிலேயே பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் வக்கீல்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில் சுமார் 80 ஆயிரம் வக்கீல்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் 7 லட்சத்து 73 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன - மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 7 லட்சத்து 73 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக, மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
2. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி., கலால் வரி தலைமை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணா ராவ் பொறுப்பு ஏற்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி., கலால் வரி தலைமை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணா ராவ் பொறுப்பேற்றார்.
3. தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு: திருப்பி கொடுக்க இந்தியா வேண்டுகோள்
தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை திருப்பி கொடுக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
5. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து
தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.