தேசிய செய்திகள்

நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு + "||" + Environment Conference in Noida PM Modi's Participation

நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற உள்ள சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
புதுடெல்லி,

இந்தியாவின் சுற்றுச்சுழல்  அழிவு,  பாலைவனமாக்கலை எதிர்த்து ஐ.நா.சபையின் 14 -வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு  நொய்டாவில்  இன்று காலை 11.15 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாடு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் , நில மேலாண்மை தொடர்பான உலகளாவிய சொற்பொழிவை அதிகரிக்கும் என பிரதமர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

கால நிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு குறித்து கடந்த 1994 ஆம் ஆண்டு பிரான்சு தலைநகர் பாரீசில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.  இந்தியா உள்பட 196 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

இந்த அமைப்பின் நாடுகளின் தலைமைப் பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வரும் நிலையில் இது குறித்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது  என்றுபிரதமர் மோடி கூறினார். காலநிலை மாற்றம், பல்லுயிர் மற்றும் நிலம் தொடர்பான மூன்று ரியோ மாநாடுகளின் சிஓபி யை நடத்துவதற்கான பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்று மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. நேரு நினைவுநாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி
நேரு நினைவுநாளான நேற்று, பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டரில் அவருக்கு அஞ்சலி தெரிவித்தனர்.
2. ஊரடங்கு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது, எந்த பலனும் அளிக்கவில்லை - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் -பிரதமர் மோடி பெருமிதம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 57-வது நாளாக அமலில் உள்ளது.
5. தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல- ராகுல் காந்தி
தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.