தேசிய செய்திகள்

18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் - ரஷியா + "||" + India will receive S 400 air defence missile systems in 18-19 months Russia

18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் - ரஷியா

18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் - ரஷியா
18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ். 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள் இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 

சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதும் கடந்த ஆண்டு அக்டோபரில்,  ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே கையெழுத்தானது.  

இப்போது 18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு எஸ் -400 ரக  ஏவுகணைகளை 2020-க்கு பிறகு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்ததாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான தாஸ் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் ரஷியாவின் துணை பிரதமர் யூரி போரிசோ, 18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

 “இந்தியாவிடம் இருந்து முன்பணம் பெறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு திட்டமிட்டப்படி , சுமார் 18-19 மாதங்களுக்குள் அனைத்து ஏவுகணைகளும் வழங்கப்படும்" என்று போரிசோவ் கூறியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தில் இந்தியா முன்நோக்கி நகர்ந்தால், இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியமான தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது.
2. வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து உடனடியாக வெளியேறிய டிரம்ப்
வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
3. ரஷியாவில் நதியில் குளித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் பலி
மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்ற சென்னை உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள நதியில் மூழ்கி பலியானார்கள்.
4. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
5. சீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டொனால்டு டிரம்ப், தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்
சீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டொனால்டு டிரம்ப் ‘தேசிய பாதுகாப்பு ஆபத்து’ சீன டிக் டாக்கை தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்.