தேசிய செய்திகள்

பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா? - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி + "||" + Can the Federal Government celebrate its victory amid the economic downturn? - Indian Communist Question

பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா? - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி

பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா? - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி
பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறை பா.ஜனதா ஆட்சியமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.


இதுகுறித்து அந்த கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ்மீர் மாநிலம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் இருக்கிறது. அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், பெருகி வரும் சகிப்புத்தன்மையற்ற செயல்கள், ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுதல், ஆர்.எஸ்.எஸ்.சின் பிரித்தாளும் திட்டங்கள் மற்றும் பொருளாதார மந்த நிலை போன்ற சிக்கல்களுக்கு மத்தியில் மத்திய அரசு எப்படி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால் அசாமில் சுமார் 20 லட்சம் பேர் எதிர்காலத்தை இழந்திருப்பதாக கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்த பதிவேட்டை முன்வைத்து மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களை பா.ஜனதாவினர் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் ‘காமெடி சர்க்கஸ் நடத்தக்கூடாது’ - மத்திய அரசுக்கு பிரியங்கா கடும் தாக்கு
மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரி்ல் கருத்து தெரிவித்துள்ளார்.
2. கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
3. “பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை” - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜவடேகர் பதில்
பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.
4. மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது - அமைச்சர் கந்தசாமி புகார்
புதுவைக்கு வழங்கும் மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது என்று அமைச்சர் கந்தசாமி புகார் தெரிவித்தார்.
5. கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு
கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.