தேசிய செய்திகள்

இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்கலாம்: மும்பை கோர்ட்டு அனுமதி + "||" + Court Allows CBI To Question Indrani Mukerjea In INX Media Case

இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்கலாம்: மும்பை கோர்ட்டு அனுமதி

இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்கலாம்:  மும்பை கோர்ட்டு அனுமதி
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
மும்பை,

இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் தனது மகள் ‌ஷினா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம், ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மும்பை சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதை விசாரித்த நீதிபதி ஜக்தலே, இந்திராணியை அவர் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் சென்று விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார். காலை 9.30 மற்றும் 12.30 மணிக்கு இடையே இந்த விசாரணையை நடத்துமாறு தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.