மாநில செய்திகள்

எனது இடமாற்றம் அல்லது ராஜினாமா பற்றி விவாதிக்க விரும்பவில்லை - தஹில் ரமானி + "||" + Don’t wish to discuss my transfer or resignation, says Tahilramani

எனது இடமாற்றம் அல்லது ராஜினாமா பற்றி விவாதிக்க விரும்பவில்லை - தஹில் ரமானி

எனது இடமாற்றம் அல்லது ராஜினாமா பற்றி விவாதிக்க விரும்பவில்லை -  தஹில் ரமானி
எனது இடமாற்றம் அல்லது ராஜினாமா பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று தஹில் ரமானி கூறி உள்ளார்.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமானி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி ஏற்றார். இவரை, நிர்வாக காரணத்துக்காக மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன்னுடைய நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று அவர் வரவில்லை.  இன்று 2 வது நாளாக அவரது அமர்வில் வழக்குகள் பட்டியலிடப்படவில்லை. 

இந்த விவகாரத்தில் அவரது கருத்துக்களை அறிய அணுகியபோது நீதிபதி தஹில் ரமானி “நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவோ அல்லது இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவோ விரும்பவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்“ என கூறினார். தி இந்து இணையதளத்தில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை! பசுமையான காடுகளை காக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள்
கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையான காடுகளை காக்க வேண்டும். டெல்லியாக மாற சென்னை விரும்பவில்லை என சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
2. சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
3. ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சென்னை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? என்று சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
4. சட்டவிரோதமாக பேனர் விவகாரம்! சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க பிரமாண பத்திரம் தாக்கல்
சட்டவிரோதமாக பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5. சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ஏ.பி.சாஹி பெயர் பரிந்துரை
பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.