தேசிய செய்திகள்

"ஆழமான படுகுழியில்" பொருளாதாரம்; மோடி அரசு எப்போது கண்களை திறக்கும் - பிரியங்கா காந்தி கேள்வி + "||" + Economy falling into deep abyss of recession says Priyanka Vadra

"ஆழமான படுகுழியில்" பொருளாதாரம்; மோடி அரசு எப்போது கண்களை திறக்கும் - பிரியங்கா காந்தி கேள்வி

"ஆழமான படுகுழியில்" பொருளாதாரம்; மோடி அரசு எப்போது கண்களை திறக்கும் - பிரியங்கா காந்தி கேள்வி
பொருளாதாரம் மந்தநிலையின் "ஆழமான படுகுழியில்" வீழ்ச்சியடைந்து வருவதாகவும், எப்போது மோடி அரசு "கண்களைத் திறக்கும்" என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,

கடந்த காலாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்த பின்னர் மத்திய அரசை   எதிர்க்கட்சிகள்  கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி வாதேரா தனது  ட்விட்டரில் வெளியிட்டு உள்ள  பதிவில்  கூற இருப்பதாவது:-

பொருளாதாரம் மந்தநிலையின் ஆழமான படுகுழியில் விழுகிறது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தில்  கத்தி தொங்குகிறது ” என்று  பிரியங்கா காந்தி இந்தி மொழியில்  ட்வீட் செய்து உள்ளார். 

மேலும் வாகனத்துறை மற்றும் டிரக் துறையின் சரிவு, உற்பத்தி-போக்குவரத்தில் எதிர்மறையான வளர்ச்சியையும், சந்தையின் நம்பிக்கையும் குறைந்து வருவதற்கான அறிகுறியாகும். மத்திய அரசு  எப்போது கண்களைத் திறக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘பொருளாதார மந்தநிலை’மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்: பிரியங்கா காந்தி
பொருளாதார மந்த நிலையை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
2. மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி - சரத்பவார் அறிவிப்பு
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் அறிவித்து உள்ளார்.
3. மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
4. ”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
5. காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் அவசியம்: சசி தரூர்
காங்கிரஸ் செயற் குழு உள்பட அனைத்து முக்கியப் பதவிகளுக்கும் தேர்தல் அவசியமானது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.