கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் + "||" + ECB disturbed by allegations of racist chanting during Ashes test

கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
லண்டன்,

இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் போட்டியில்  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்ற குற்றச்சாட்டுகளால் மிகவும் கலக்கமடைந்துள்ளது.

இங்கிலாந்தின் பார்படோஸில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரைப் பற்றி ரசிகர்களில்  ஒரு பகுதியினர் இனவெறிப் பாடலைப் பாடியதைக் கேட்டு கடந்த வியாழக்கிழமை நடந்த போட்டியின்  இரண்டாவது நாளில் ஒரு ஆதரவாளர்  மைதானத்தில் இருந்து வெளியேறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

பார்வையாளர் ஒருவர்  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதி உள்ள  கடிதத்தில், பெண்கள் பாலியல் கோஷங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில் ஒரே குழுவினர்  சில வீரர்களை நோக்கி ஆபாச செய்கைகளை செய்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிரிட்டிஷ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்  "இது ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றாலும், விளையாட்டிற்குள் சமூக விரோத நடத்தைக்கு முற்றிலும் இடமில்லை, மேலும் அனைத்து பார்வையாளர்களும் சமூக விரோத நடத்தைகளை புகாரளிக்க முடியும் என்பதையும், அவ்வாறு செய்வதில் பாதுகாப்பாக இருப்பதையும் உணர வேண்டியது அவசியம்" என கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
3. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
4. ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.
5. நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல்
நியூசிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகி இருக்கிறார்.