தேசிய செய்திகள்

காஷ்மீரில் போஸ்டர்களால் மக்களை அச்சுறுத்திய 8 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது + "||" + Eight LeT militants arrested for threatening locals with posters in Sopore

காஷ்மீரில் போஸ்டர்களால் மக்களை அச்சுறுத்திய 8 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் போஸ்டர்களால் மக்களை அச்சுறுத்திய 8 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் போஸ்டர்களால் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்திய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் நகரில் பிரபல பழ வியாபாரியாக இருந்து வருபவர் ஹமீதுல்லா ராவுத்தர்.  கடந்த வாரம் இரண்டு பயங்கரவாதிகள் இவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.  ஆனால் அங்கு அவர் இல்லை.

இதனால் அவர்கள், அவரது குடும்பத்தினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.  இதில் அவரது பேத்தியான அஸ்மா ஜான் என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.  படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்பின்பு காஷ்மீரின் சில பகுதிகளில் பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வகையில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.  பொதுமக்களை சட்டத்திற்கு கீழ்படியாமல், வன்முறையில் ஈடுபட தூண்டும் வகையிலும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர்களால் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்திய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதிகள் 8 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை அருகே ஜீவ சமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேர் கைது
சிவகங்கை அருகே ஜீவசமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பந்தல், மின்விளக்கு அலங்காரத்துக்கு ரூ.3 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2. மதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது
புதுக்கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் நண்பர் கைது செய்யப்பட்டார்.
3. முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 12 போ் கைது
5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
4. நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
நாமக்கல்லில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சாவு; 4 பேர் கைது
ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.