மாநில செய்திகள்

மத்திய பாஜக அரசின் 100 நாட்கள் சாதனைகள் என்ன? மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் + "||" + Of the Central BJP What are the 100 Day Achievements? Central Finance Minister Nirmala Sitharaman

மத்திய பாஜக அரசின் 100 நாட்கள் சாதனைகள் என்ன? மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய பாஜக அரசின் 100 நாட்கள் சாதனைகள் என்ன? மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய பாஜக அரசின் 100 நாட்கள் சாதனைகள் என்ன என்பது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
சென்னை,

சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி சிறப்பு அதிகாரம் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டே நீக்கம் செய்துள்ளோம். ஒரு சட்டம் இருக்கிறது என்றால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். ஆனால் சட்டப்பிரிவு 370 உபயோகமாக இல்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து நாங்கள் கூறியுள்ளோம். ஜனசங்க காலத்தில் இருந்து சிறப்பு அந்தஸ்து ரத்தை வாக்குறுதியாக அளித்தோம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு ஜம்மு- காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் முதலீடு பெருகும். சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய சிறிய வங்கிகள் இணைப்பு உதவும்.   ஒரே வரியான ஜிஎஸ்டி மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ளது.

மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பொருளாதாரம் வேகமாக வளர ஜிஎஸ்டியும் உதவும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு  செய்யப்பட்டு உள்ளது

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1.95 கோடி வீடுகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

 ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க ஆயுஷ்மான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த ப்ரீமியத்தில் உயரிய சிகிச்சையை ஏழைகள் பெறுகின்றனர். 41 லட்சம் பேர் இதுவரை இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம்  அடைந்து உள்ளது.

மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைத்துள்ளோம். ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம்.

விவசாயிகளுக்கு நிதியுதவி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம், தவிர ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. 6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது . 

அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்கமளிக்கப்படும்.

வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அதிகாரிகள் பொருளாதார துறையினருடன் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குழாய் மூலம் குடிநீர் வழங்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம் என கூறினார்.