தேசிய செய்திகள்

ரூ.500 அபராதம் செலுத்தியவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கிய போலீசார்! + "||" + Violators fined with Rs 500 for not wearing helmets, are being given free-of-cost helmets by the police

ரூ.500 அபராதம் செலுத்தியவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கிய போலீசார்!

ரூ.500 அபராதம் செலுத்தியவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கிய போலீசார்!
ஒடிசாவில் ரூ.500 அபராதம் செலுத்தியவர்களுக்கு போலீசார் இலவசமாக ஹெல்மெட் வழங்கிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புவனேஷ்வர்,

நாடு முழுவதும் இருசக்கர வாகனம் ஓட்டுவோரை ஹெல்மெட்  அணிய வைக்க மாநில அரசுகள் படாத பாடுபட்டு வருகிறது. நீதிமன்றங்கள் பலமுறை தானாக முன்வந்தும், பொதுநல வழக்குகள் மூலமும் மாநில அரசுகளுக்கு ஹெல்மெட்  அணியாமல் செல்வோர் குறித்து கவலை தெரிவித்துள்ளது. 

ஹெல்மெட் அணியாமல் செல்வோரை ஏதோ கொலைக் குற்றம் செய்தோரைப் போல போலீசார் நடுரோட்டில் விரட்டி விரட்டி பிடிப்பதுவும், நடந்து செல்லவே முடியாத அளவில் மோசமான சாலைகளை வைத்திருப்பதும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில்  வழக்கமாக ஹெல்மெட்  அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து ரூ.500 அபராதம் செலுத்தியவர்களுக்கு போலீசார் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கி வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை பின்பற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு 'நன்றி' அட்டை வழங்கப்பட்டது.