உலக செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் + "||" + The launch of Apple's most powerful iPhone 11 Pro

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் 11 ப்ரோ அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் 11 ப்ரோ அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்வில் இதுவரை வெளியான மாடல்களில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியா,

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இது புகைப்படங்களை அழகாக்க ஒன்பது படங்களை ஒன்றிணைத்து சிறந்த புகைப்படத்தை அதிவேகமாக வழங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபோன் 11 ப்ரோ மாடல் விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 20-ம் தேதி துவங்குகிறது.