உலக செய்திகள்

‘இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்’ - பாகிஸ்தான் மந்திரி குரேஷி சொல்கிறார் + "||" + "Kashmir is part of India’ - Pakistani minister Qureshi says

‘இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்’ - பாகிஸ்தான் மந்திரி குரேஷி சொல்கிறார்

‘இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்’ - பாகிஸ்தான் மந்திரி குரேஷி சொல்கிறார்
இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர் என பாகிஸ்தான் மந்திரி குரேஷி கூறினார்.
ஜெனீவா,

காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறாமல், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றே பாகிஸ்தான் இதுவரை கூறி வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்ற குரேஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி உலகத்தை நம்ப வைக்க இந்தியா முயற்சி செய்கிறது. உண்மையிலேயே அங்கு இயல்புநிலை திரும்பி இருந்தால், சர்வதேச ஊடகங்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினரை இந்திய மாநிலமான (இந்தியாவின் ஒரு பகுதி) ஜம்மு-காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்?. அவர்களை அனுமதித்தால் உண்மை நிலை தெரிந்து விடும்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய குரேஷி, காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு
7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
2. ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு
ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ80 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
3. 5 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் 4 பேர் விடுவிப்பு
5 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
4. ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு
மத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. கடும் குளிரால் காஷ்மீரில் தால் ஏரி உறைந்தது
கடும் குளிர் காரணமாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்தது.