தேசிய செய்திகள்

ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு: விநாயகர் சிலை கரைக்க சென்றபோது பரிதாபம் + "||" + Six Children Feared Dead after Drowning During Ganesha Idol Immersion in Karnataka's Kolar

ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு: விநாயகர் சிலை கரைக்க சென்றபோது பரிதாபம்

ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு: விநாயகர் சிலை கரைக்க சென்றபோது பரிதாபம்
விநாயகர் சிலை கரைக்க சென்றபோது, ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோலார் தங்கவயல்,

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் மரதகட்டா கிராமத்தை சேர்ந்த 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 8 பேர் நேற்று அந்தப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவர்கள் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்தனர்.


அப்போது ஏரியில் களிமண் எடுத்து அவர்கள் விநாயகர் சிலை செய்தனர். பின்னர் அந்த சிலையை அங்குள்ள ஏரியில் கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் 6 சிறுவர், சிறுமிகள் ஏரியில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும் அளித்த தகவலின்பேரில் பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிய மற்ற 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர்களும் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 28 ஏரிகளை புனரமைக்கும் பணி
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 28 ஏரிகளை புனரமைக்கும் பணிகளை குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
2. ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
3. கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்
கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் ஏரி-குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
4. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் சாவு நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது பரிதாபம்
ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த தனியார் நிறுவன மெக்கானிக் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தார்.
5. ஏரி, குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ஏரி, குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...