தேசிய செய்திகள்

புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் - அபராதத்தை குறைத்து குஜராத் அரசு நடவடிக்கை + "||" + The new motor vehicle will be charged by law - Gujarat government to reduce fines

புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் - அபராதத்தை குறைத்து குஜராத் அரசு நடவடிக்கை

புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் - அபராதத்தை குறைத்து குஜராத் அரசு நடவடிக்கை
புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை குறைத்து குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காந்திநகர்,

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.


இந்த சட்டம் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. மேலும் சில மாநில அரசுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளன.

இந்த நிலையில் இந்த புதிய சட்டப்படி உயர்த்தப்பட்டுள்ள அபராதத்தை குறைத்து குஜராத் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்தவகையில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.500 ஆக குஜராத் அரசு குறைத்துள்ளது.

இதைப்போல லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ.5 ஆயிரம் என்பதை, இரு சக்கர வாகனம் ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும், 4 சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்
புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. புதிய மோட்டார் வாகன சட்டம் ஜார்கண்டில் 3 மாதம் தள்ளிவைப்பு
புதிய மோட்டார் வாகன சட்டம், ஜார்கண்டில் 3 மாதம் தள்ளிவைக்கப்பட்டது.
3. புதிய மோட்டார் வாகன சட்டம்: லாரி டிரைவருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார்!
டெல்லியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
4. புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை
புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்படும் அபராத தொகையை தளர்த்தி உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
5. அதிக அபராதம், சிறைத் தண்டனையுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டம், தமிழகத்தில் அமலாவது எப்போது?
அதிக அபராதம், சிறைத்தண்டனையுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டம், தமிழகத்தில் எப்போது அமலாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.