தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு - மராட்டிய தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை + "||" + Maharashtra polls: Sharad Pawar meets Sonia Gandhi over seat-sharing arrangement

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு - மராட்டிய தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு - மராட்டிய தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை
மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,

பா.ஜனதா ஆளும் மராட்டிய மாநிலத்தின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதா ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆட்சியை பிடிக்க மும்முரம் காட்டி வருகின்றன.


மராட்டியத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி உருவாகி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, நடைபெற இருக்கும் மராட்டிய சட்டசபை தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த மாநில முன்னணி தலைவர்கள் கடந்த சில வாரங்களாக அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டணியின் இறுதி வடிவம் தொடர்பாகவும் இரு தலைவர்களும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், இரு கட்சிகளின் மாநில தலைவர்கள் இடையே அடுத்த சில நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என இரு கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய ஆளுநருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்திப்பு
மராட்டிய ஆளுநரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்துப் பேசினார்.
2. கொரோனா வைரஸ் மிகப்பெரிய ஆபத்து பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் மிகப்பொிய ஆபத்து, பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.
3. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார் அஜித்பவார்
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது வீட்டில் அஜித்பவார் சந்தித்தார்.