உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் + "||" + Blast at US Embassy in Kabul on 9/11 anniversary

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே  தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காபூல்,

அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நள்ளிரவு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தூதரக வளாகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. தாக்குதலையடுத்து, நிகழ்விடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள், பாதுகாப்பு படயினர் கொண்டு வந்தனர் தாக்குதல் நடைபெற்ற துதரகத்தில் அருகில் தான் நேட்டோ படையினரும் முகாமிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இந்த தாக்குதல் பற்றி எந்த கருத்தும் வெளியிடவில்லை.

அமெரிக்கா - தலீபான்கள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் நடக்கும் முதல் தாக்குதல் இதுவாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இந்திய வாலிபர் கைது
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலை படை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
3. கொரியா எல்லை: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தம்
கொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
5. ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகம் அருகே கார் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் பலியாகினர்.