தேசிய செய்திகள்

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு + "||" + Telugu Desam Party (TDP) Chief N. Chandrababu Naidu and his son, Nara Lokesh have been put under house arrest.

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு
தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமராவதி,

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் வன்முறை மற்றும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள தெலுங்கு தேசம் இன்று பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தது.  

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரே லோகேஷ் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு இல்லத்திற்கு செல்ல முயன்ற அவரது கட்சியினரையும் தடுத்து நிறுத்திய போலீசார், தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். நரசரவ்பேட்டா, சட்டினோப்பள்ளி, பல்னாடு, குர்ஜாலா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பின்னோக்கி நடக்கும் போராட்டம்
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.