மாநில செய்திகள்

இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை -மு.க.ஸ்டாலின் + "||" + India's economy is down 5% 100 day record of Modi regime MK Stalin

இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை -மு.க.ஸ்டாலின்

இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை -மு.க.ஸ்டாலின்
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின் இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை என கூறினார்.
ராமநாதபுரம்,

இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் பரமகுடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி மற்றும் திமுக பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  கூறியதாவது:-

தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர் இமானுவேல் சேகரன். அவரது 62-வது நினைவு தினத்தில் எனது அஞ்சலியை செலுத்தியுள்ளேன். அகில இந்திய ராணுவத்திலே பணியாற்றிய அவர் 1950-ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்தை  கண்டவர். 1954-ல் தீண்டாமை மாநாட்டை நடத்தி தீண்டாமை ஒழிக்க  பாடுபட்டவர் என்றார்.

இந்திய பொருளாதாரத்தின் 5 சதவீத வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை எனறும் கூறினார்.