தேசிய செய்திகள்

பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுகாவல்: சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் + "||" + House arrest for Farooq Abdullah: Vaiko filed a petition in the Supreme Court

பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுகாவல்: சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுகாவல்: சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, எழுந்த சூழ்நிலை காரணமாக அந்த மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா உள்ளிட்ட சில தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.


பரூக் அப்துல்லா வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ம.தி.மு.க. சார்பில் 15-ந் தேதி அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனத்தில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கலந்து கொள்ள ஒப்புக்கொண்டு உள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்காக வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கோவில்களுக்கு செல்லும் விசுவாசிகளை கேலி செய்யாதீர்கள்; திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும் -வைகோ
கோவில்களுக்கு செல்லும் விசுவாசிகளை கேலி செய்யாதீர்கள், திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும் என வைகோ பேசினார்.
2. வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
வைகோவின் ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
3. காஷ்மீர் விவகாரம்: காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருக்கிறேன்-வைகோ
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
4. வைகோவுடன் புகைப்படம் எடுப்போர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்; ம.தி.மு.க.
வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என ம.தி.மு.க. தெரிவித்துள்ளது.
5. முதலாமாண்டு நினைவு நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ, அழகிரி அஞ்சலி
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு பேரணியாக வந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், வைகோ, அழகிரி உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.