தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு + "||" + INX media case: P Chidambaram has approached Delhi High Court challenged the order on his judicial custody in the CBI case.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த நிலையில், ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், தனது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதுதவிர, தன்னை நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும், சி.பி.ஐ. கைது மற்றும் விசாரணைக்கு எதிராகவும், ஒட்டுமொத்த வழக்குக்கு எதிராகவும் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள சி.பி.ஐ தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை கடந்த 5-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் - ப.சிதம்பரம் வேண்டுகோள்
நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. பொது பாதுகாப்பு சட்டம் ஜனநாயகத்தில் மிக மோசமானது அருவருப்பானது- ப.சிதம்பரம்
உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
3. பணம் திரட்டுவதற்காக மட்டுமே எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது - ப.சிதம்பரம் கருத்து
பணம் திரட்டுவதற்காக மட்டுமே எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
4. "டெல்லி தேர்தலுக்கு முன் பேச வேண்டிய 3 விஷயங்கள்" -மோடிக்கு ப.சிதம்பரத்தின் ஆலோசனை
பிரதமர் மோடி டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மூன்று விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
5. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.