மாநில செய்திகள்

கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + To clean the Kuvam Did MK Stalin and M Subramanian go abroad? Is the cone clean? Minister Jayakumar

கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார்

கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார்
கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,

சென்னையில் ரூ.200 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா முயற்சியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து பட்டிமன்றம் நடத்த அதிமுக தயார்.  விவாதத்திற்கு எதிரணியினர் தயாரா?

அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்தன.வெளிநாட்டு முதலீடுகள் இன்னும் நிறைய வர இருக்கின்றன.  முதலமைச்சருக்கு, ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன்.

தி.மு.க. ஆட்சியின் போது கூவத்தை சுத்தப்படுத்த மு.க. ஸ்டாலினும், மா. சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா?

தி.மு.க.வினர் வெளிநாடு சென்றது தொடர்பாக வெள்ளை மனதுடன் அறிக்கை தர வேண்டும். முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியும், ஸ்டாலினும் கூட தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்று வந்துள்ளனர்.

தம் மீது குற்றத்தை வைத்து கொண்டு அடுத்தவர்களை குற்றம்சாட்டுவதா?வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு என்பதை திறந்த மனதோடு பாராட்ட வேண்டும்.  அ.தி.மு.க. ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் வந்துள்ளன. எனவே ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தினால் ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவிக்கலாம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரத்தில் குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆரப்பாட்டம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு குறித்துச் சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
3. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
4. நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினே என்று பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன்!! -திமுகவில் சேருகிறாரா...?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நாளைய தமிழகத்தின் தலைவர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியுள்ளார். இதனால் அவர் திமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்; திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை -மு.க.அழகிரி வேதனை
அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர் ஆனால் திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.