தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்கள் செப்-14-ம் தேதி முதல் ஏலம் + "||" + Over 2700 gifts received by PM Modi to be auctioned from September 14

பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்கள் செப்-14-ம் தேதி முதல் ஏலம்

பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்கள் செப்-14-ம் தேதி முதல் ஏலம்
பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்கள் வரும் 14-ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கொடுக்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை மந்திரி பிரகலாத் படேல் கூறியதாவது:-

பிரதமர் மோடி செல்லும் இடங்களில் அவருக்கு பல்வேறு தரப்பினரும்  அன்பளிப்பாக பல பொருட்களை வழங்குகிறார்கள். இந்த பொருட்களை  ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி, கடந்த ஜனவரியில் 1800 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் 14 நாட்கள் இந்த ஏலம் நடந்தது. அதில் கிடைத்த தொகை அனைத்தும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 2,772 பொருட்கள் செப்டம்பர் 14-ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படுகிறது.

இந்த பொருட்களின் அடிப்படை விலையை பொறுத்தவரையில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 200-ம் அதிகபட்ச தொகையாக ரூ. 2.5 லட்சமும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி குஜராத் முதல்-மந்திரியாக பதவியில் இருந்த காலம் முதலே தனக்கு அன்பளிப்பாக வரும் பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவியாக அளித்து வருவது குறிப்பிடத்தக்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்தித்தார்.
2. பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்
பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பிரதமர் மோடியுடன் நாராயணசாமி சந்திப்பு: கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தல்
பிரதமர் மோடியை நாராயணசாமி நேரில் சந்தித்தார். அப்போது அவர் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தியதாக கூறினார்.
4. பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார்
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
5. நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் - பிரதமர் மோடி
நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.