தேசிய செய்திகள்

”கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை” நிதிஷ்குமார் குறித்து துணை முதல்வர் சுசில் குமார் மோடி + "||" + Sushil Kumar Modi tweets on Nitish Kumar’s role in Bihar,

”கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை” நிதிஷ்குமார் குறித்து துணை முதல்வர் சுசில் குமார் மோடி

”கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை”  நிதிஷ்குமார் குறித்து துணை முதல்வர் சுசில் குமார் மோடி
கேப்டன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசும்போது மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடம் இல்லை என பீகார் மாநில அரசியல் நிலவரம் குறித்து தனது சகாக்களுக்கு துணை முதல்வர் சுசில்குமார் மோடி தெரிவித்து உள்ளார்.
பாட்னா

பீகாரில் பாரதீய ஜனதா-நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்  கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமாரும் துணை முதல்வராக பாரதீய ஜனதாவின் சுசில் குமார்  மோடியும் உள்ளனர்.

கடந்த வாரம் உத்தியோகபூர்வ பயணமாக துணை முதல்வர் மங்கோலியா சென்று இருந்தபோது, பாஜக தலைவர்களான சஞ்சய் பாஸ்வான் மற்றும் சிபி தாக்கூர் பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை  பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சந்திப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த திங்கட்கிழமை பாஜக எம்.எல்.சி சஞ்சய் பாஸ்வான் பேசும்போது, நிதிஷ் குமார் "டெல்லி செல்ல வேண்டும்" என்றும் சுசில் குமார் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

கட்சியின் மூத்த தலைவர் பி தாக்கூர், பாஜக அடுத்த ஆண்டு பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் கூட்டத்தை இழுக்கும் சக்தியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

இரு பாஜக தலைவர்களின் கருத்துக்களால் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள்  வருத்தமடைந்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள துணை முதல்வர் சுஷில் குமார் மோடி செய்துள்ள ட்விட்டில்,

"நிதீஷ் குமார் பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக உள்ளார், மேலும் 2020-ல் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அதன் கேப்டனாக இருப்பார். கேப்டன் பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசி இன்னிங்ஸ் வெற்றி பெறும்போது மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லை” என கூறி உள்ளார்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி பாஜகவை "இதுபோன்ற விரும்பத்தகாத கோரிக்கையை" செய்வதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நிதீஷ் குமார் முதல்வர் என்பதில் யாருக்கும் எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது என்று தியாகி தலைமைத்துவ பிரச்சினையில் கட்சியின் நிலைப்பாட்டை வலுவாக  எடுத்துரைத்தார்.

பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு கூட்டாளியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் நிதீஷ்குமார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக இருப்பார் என்றார். "இந்த பிரச்சினையில் எந்த குழப்பமும் இல்லை" என்று பாஸ்வான் கூறினார்.