உலக செய்திகள்

படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான இரண்டு வருட விசா -இங்கிலாந்தில் மீண்டும் அறிமுகம் + "||" + U.K. opens up two-year post-study work permit visa again

படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான இரண்டு வருட விசா -இங்கிலாந்தில் மீண்டும் அறிமுகம்

படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான இரண்டு வருட விசா -இங்கிலாந்தில் மீண்டும் அறிமுகம்
படிப்புக்கு பிந்தைய பயிற்சி, வேலைக்கான இரண்டு வருட விசாவை இங்கிலாந்து மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்து உள்ளது.
லண்டன்,

சர்வதேச மாணவர்களுக்கான இரண்டு வருட  படிப்புக்கு பிந்தைய  வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு  செய்துள்ளது. இது திறமையான மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்குப் பிறகு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

2012-ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் பணி விசா ரத்து  செய்யப்பட்டது, சர்வதேச மாணவர் சேர்க்கை பாதிப்பை ஏற்படுத்தியது, ஏனெனில் அவர்கள் படிப்பை முடித்து நான்கு மாதங்களிலேயே வெளியேற வேண்டியிருந்தது.

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் தீவிர விவாதம் மற்றும் கோரிக்கைக்கு பின்னர் மற்ற நாடுகளில்  திறமைகளை இழக்க நேரிடும் என்று அஞ்சிய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விசா 2020-21 ஆண்டு மாணவர்களுக்கு பொருந்தும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள்  திறமைக்கு தகுந்தவாறு திறமையான பணி விசாவிற்கு மாற முடியும். 2012-ஆம் ஆண்டு போலன்றி, இந்த புதிய பாதையில் உண்மையான, நம்பகமான மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவதை உறுதி செய்வதற்கான பாதுகாப்புகளும் அடங்கும்.

இது குறித்து இந்தியாவின் இங்கிலாந்து தூதர் சர் டொமினிக் அஸ்கியூத் இந்திய மாணவர்களுக்கு இது ஒரு அருமையான செய்தி, அவர்கள் இப்போது பட்டப்படிப்பை முடித்த பின்னர் யு.கே.யில் அதிக நேரம் செலவிட முடியும்,  மேலும் திறன்களையும் அனுபவத்தையும் பெற அனுமதிக்கிறது என கூறினார்.

 இங்கிலாந்து இன்டர்நேஷனல் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், வேலை விசாவை  மீண்டும் அறிமுகப்படுத்துவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.

தற்போது வரை 19,750 இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில்  உள்ளனர், 19,750 மாணவர்களில் 11,255 பேர் முதுகலை படிப்புகளையும், 1,555 பேர் முதுகலை ஆராய்ச்சி படிப்புகளிலும், 6,945 பேர் இளங்கலை படிப்புகளிலும் உள்ளனர் என்று உயர் கல்வி புள்ளிவிவர நிறுவனம் (ஹெசா) தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடவடிக்கையால் இந்தியாவிலிருந்து சிறந்த திறமைகளை ஈர்ப்பதற்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் பணியாற்ற அதிக வாய்ப்புகளைத் திறப்பதற்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என இங்கிலாந்துபலகலைக்கழகங்கள் தெரிவித்து உள்ளன.   

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கான பிரிட்டிஷ் துணை உயர் தூதர் ஆண்ட்ரூ ஃப்ளெமிங் இந்த நடவடிக்கையை வரவேற்று, இந்திய மாணவர்கள் குறிப்பாக மகிழ்ச்சியடைவார்கள். இங்கிலாந்து விசாவிற்கு விண்ணப்பித்த  இந்தியர்களில் 96 சதவீதம் பேர் வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் தங்க கழிப்பறை கோப்பை திருட்டு
இங்கிலாந்தில் தங்க கழிப்பறை கோப்பை திருடப்பட்டது.
2. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல்-அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
3. வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 312 சீக்கியர்கள் பாதகமான பட்டியலில் இருந்து நீக்கம்
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 312 சீக்கியர்கள் பாதகமான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
4. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா? - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
5. இங்கிலாந்தில் ருசிகரம்: மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்
இங்கிலாந்தில் வாலிபர் ஒருவர் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.