மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்தது:30 பேரில், 10 பேர் மாயம் என தகவல் + "||" + The boat crashes while trying to cross the river

கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்தது:30 பேரில், 10 பேர் மாயம் என தகவல்

கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்தது:30 பேரில், 10 பேர் மாயம் என தகவல்
அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்ததில் 30 பேரில் 10 பேரை காணவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
அரியலூர்,

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர். 

அப்போது எதிர்பாரத விதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது படகு  கவிழ்ந்தது. 30 பேரில் 10 பேர் மீட்கப்பட்டநிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சம் அடைந்தனர்.

படகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர் செல்வதால் படகு நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே அந்தபகுதி மக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை