மாநில செய்திகள்

தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது; மு.க. ஸ்டாலின் + "||" + The Tamil language is in danger; MK Stalin

தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது; மு.க. ஸ்டாலின்

தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது; மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னையில் நடந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று பேசும்பொழுது, வெள்ளைக்காரர்கள் வரவில்லை எனில், இந்தியா சோமாலியா போன்ற நாடாக மாறியிருக்கும். பிற மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் தாய்மொழிப்பற்று அவசியம் அதிகம் வேண்டும்.

தி.மு.க.காரர்களின் வீட்டிலேயே தமிழ் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருவர் வீட்டில் மட்டுமல்ல, பலரின் வீட்டிலும்.

தெரிந்த நண்பரிடத்தில் உங்கள் பேத்தியா என்று கேட்டால் ஆம் என்றார். பெயர் என்ன என்று கேட்டால், அனீஷா என்கின்றனர். இன்னொருவரை கேட்டால் அவ்ஸ்வீத் என்று சொல்கின்றனர். இந்த நிலைதான் இப்போது இருக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும் இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில், சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.  தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று திமுக ஆட்சியில் அமரும் - மு.க. ஸ்டாலின்
வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று திமுக ஆட்சியில் அமரும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் ; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் - மு.க. ஸ்டாலின்
நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. 'நிர்பயா' நிதியில் ரூ.6 கோடி மட்டுமே செலவு என்பது அதிர்ச்சி அளிக்கிறது; மு.க. ஸ்டாலின் அறிக்கை
'நிர்பயா' நிதியில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
5. சுஜித் விவகாரம்: கோபத்தைத் தவிர்க்க வேண்டும், முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்
குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.